பச்சை மணத்தக்காளிக்காய் – ஒரு கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்
தேங்காய்ப்பால் – ஒரு கப், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், காரப்பொடி -- 1/2 டீஸ்பூன் குழம்பு பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயம் -- 1/8 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, சீரகம்– தலா அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் -- 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
மணத்தக்காளியை அலம்பி காம்பு நீக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, , நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், குழம்பு பொடி போட்டுக் கிளறவும். மணத்தக்காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப்பால் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சாதத்தில் பிசைந்து பொறித்த அப்பளத்துடன் சாப்பிடவும். |
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!என் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது!
திங்கள், 25 ஏப்ரல், 2016
பச்சை மணத்தக்காளிக்காய் குழம்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக