செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மசாலா பப்பட்




தேவை
பெரிய சைஸ் மிளகு அப்பளம்
வெங்காயம்
பச்சை குடை மிளகாய்
சிகப்பு குடை மிளகாய்
மஞ்சள் குடை மிளகாய்
துருவிய கேரட்
சாட் மசாலா பொடி
ஓமப்பொடி
எலுமிச்சம் பழ ரசம்
 உப்பு
செய்முறை
முதலில் வெங்காயம், குடை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும்.
மசாலா பப்பட் பரிமாறுவதற்கு முன் மிளகு அப்பளத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்தோ (அ) அப்பளத்தின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி தவாவில் ரோஸ்ட் செய்தோ எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை, சிகப்பு, மஞ்சள் மிளகாய் இவற்றை போட்டு இரண்டு சிட்டிகை உப்பு , எலுமிச்சம் பழ ரசம் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பரிமாறும் முறை
ரோஸ்ட் செய்த அப்பளத்தின் மேல் உப்பு, எலுமிச்சம்பழ ரசம் கலந்து வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய் கலவையை பரவலாக தூவி அதன் மேல் கேரட் துருவலையும், சாட் மசாலா பொடியையும் தூவி கடைசியாக  ஓமப்பொடி மேலே உதிர்த்து உடனடியாக பரிமாறவும்.
மேலும் மேலும் சாப்பிட தூண்டும் மற்றும் நினைத்த உடனே சுலபமாக செய்து சாப்பிட கூடிய இந்த ருசியான மசாலா பப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு உணவாகும்.
மிளகு அப்பளத்தில் ஏற்கனவே உப்பும் , மிளகின் காரமும் இருப்பதினால் வெங்காயம், குடை மிளகாய் கலவையில் சிறிதளவு அளவு உப்பு சேர்த்தாலே போதுமானது.
விருப்பபட்டால் வெள்ளரிக்காய், தக்காளி இவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த காய்கறிகளில் எல்லாம் நீரின் தன்மை அதிகம் இருப்பதினால் சாப்பிடுவதற்கு முன் அப்பளத்தின் மேல் தூவி உடனடியாக பரிமாறி விட வேண்டும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக