பாயசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாயசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூன், 2016

பனீர் பாயசம்

தேவை
கொழுப்பு நீக்காத பால் - 2 கப்
பன்னீர் துருவல் -  3/4 கப்
சர்க்கரை  - 1/4 கப்
கண்டஸ்ட் மில்க்  - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி,பாதாம் பருப்பு வகைகள்(சிறு துண்டுகளாக்கியது) ஒரு கைப்பிடி
பாதாம் பால் - 1/4 கப்
குங்குமப்பூ  - 4,5 இதழ்கள்
ரோஜா அல்லது வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை
பன்னீரை  கேரட் துருவி மூலம் துருவிக் கொள்ளவும்.15 பாதாம்களை  சூடான பாலில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பாலை நன்கு காய்ச்சி அதில் சர்க்கரை  சேர்த்து,அந்த பால் கலவையை 5 நிமிடம் கொதிக்க விடவும். பாதாம் பாலை சேர்க்கவும்.ஏலப்பொடி மற்றும் கண்டஸ்ட் மில்க்கை சேர்க்கவும்.




ஐந்து  நிமிடம் கொதித்தபின் துருவிய பன்னீரை சேர்க்கவும். மேலும் ஐந்து நிமிடம் கொதித்த பின்  வெனிலா அல்லது ரோஜா எசன்ஸை சேர்க்கவும். குங்குமப்பூ சேர்க்கவும்.பாயசம் கெட்டியாக ஆன பின் அடுப்பை அணைக்கவும்.

இக்கலவை ஆறியவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பின்னர் பொடித்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.




இதை கண்டஸ்ட் மில்க், எசன்ஸ் சேர்க்காமலும் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வரும்போது எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம் இது.

ஞாயிறு, 15 மே, 2016

காரட் பாதாம் பாயசம்


தேவை
பாதாம்--- 40
முந்திரி--- 25
காரட்--- பெரிதாக 1
சர்க்கரை--- 1 கப்
பால்-- 1 லிட்டர்
குங்குமப்பூ--- 10 இதழ்கள்
ஏலக்காய்--- 8

மேலே அலங்கரிக்க

பாதாம், முந்திரி, திராட்சை


செய்முறை

பாதாம், முந்திரியை வென்னீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.



காரட்டை துருவி சிறிது பாலுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்து, பாதாம், முந்திரி விழுதும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.



பாலை 3/4 லிட்டர் ஆகும்வரை காய்ச்சவும். அதில் அரைத்த விழுது, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடியில் பிடித்துவிடும்.



பாலும், விழுதும் சேர்ந்துகொண்டதும் இறக்கவும்.

மேலே குங்குமப்பூ இதழ்களை சேர்க்கவும்.ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.



குளிர வைத்து கப்புகளில் பரிமாறும்போது, மெலிதாகச் சீவிய பாதாம், மிந்திரி, மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும். ரிச்சான இந்த பாயசம் பார்ட்டிகளுக்கு ஏற்றது.

திங்கள், 2 மே, 2016

அவல் பாயசம்

அவல்-- 1/2 கப்
ஜவ்வரிசி-- 5 தேக்கரண்டி
சர்க்கரை-- 1கப்
பால்-- 1 கப்
ஏலக்காய்-- 6
மிந்திரி-- 10
திராட்சை-- 10
நெய்-- 2 தேக்கரண்டி
ஒரு வாணலியில் நெய்யைச் சூடாக்கி அதில் மிந்திரி, திராட்சையை சிவக்க வறுக்கவும். அதை எடுத்து விட்டு அதிலேயே அவலைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
தண்ணீரும், 2 கரண்டி பாலும் சேர்த்து கொதிக்க விடவும். அதில் வறுத்த அவல், ஜவ்வரிசி சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு வெந்ததும் அதில் சர்க்கரை சேர்க்கவும். கரைந்ததும் இறக்கி அதில் மீதி பாலை விட்டு, ஏலக்காயை பொடி செய்து போட்டு, வறுத்த மிந்திரி, திராட்சை சேர்த்து சூடாகவோ, குளிர வைத்தோ அருந்தவும்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

சேமியா பிரதமன்

வியாழன், 25 பிப்ரவரி, 2016

வரகு கருப்பட்டி பாயசம்

வரகு கருப்பட்டி பாயசம்
தேவை

வரகு....1/4 கப்
கருப்பட்டி....1/2 கப்
தேங்காய்ப்பால்...1/2 கப்
பால்....1கப்
ஏலப்பொடி
நெய்...2டீஸ்பூன் முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள்
குங்குமப்பூ....சில இதழ்கள்

செய்முறை

வரகை லேசாக வறுத்து, பாலுடன் 11/2கப் நீர் சேர்த்து குக்கரில் ஆவி வந்ததும் வெயிட் போட்டு கேஸை சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெளியில் எடுத்து சற்று கொதித்ததும், அத்துடன் தே.பால் சேர்க்கவும். கருப்பட்டியை தூள் செய்து சேர்த்து 10நிமிடம் கிளறி இறக்கவும். ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை,பாதாம் வறுத்து சேர்க்கவும். குங்குமப்பூ போட்டு சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடவும்.



சாமை பால் பாயசம்

சாமை பால்  பாயசம்

தேவை

பால்---  1 லிட்டர்
சாமை அரிசி---5 டேபிள்  ஸ்பூன் 
சர்க்கரை--- 1 கப்
முந்திரிப்  பருப்பு--- 15
பாதாம் பருப்பு ---10 (வெந்நீரில் ஊறவைத்து  தோலி நீக்கவும்.) 
ஏலக்காய்--- 8
குங்குமப்பூ---  சிறிது

செய்முறை

பாலை  குக்கரில்  விட்டு  அதில்  சாமை அரிசியை  நன்கு  களைந்து  போட்டு  ஆவி  வந்ததும்  வெயிட்டைப் போடவும்.

கேசை சிம்மில்  அரை  மணி  நேரம்  வைக்கவும்.  அணைத்துவிடவும்.

குக்கரைத் திறந்து கேசை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும்.

முந்திரி, பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு சற்று ஊறியதும் சிறிது பாலுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரிசி  வெந்து  பால்  கெட்டியாகி  இளமஞ்சள்  நிறமானதும்,  அதில்சர்க்கரை  சேர்க்கவும்.  சர்க்கரை  கரைந்து  சேர்ந்து  கொண்டதும்,  முந்திரி, பாதாம் அரைத்த விழுதை  சேர்க்கவும். கைவிடாமல் கிளறவும். 

ஏலக்காயைப்  பொடி  செய்து  போட்டு,  குங்குமப்பூவை  போட்டு  மேலும் ஐந்து  நிமிடம்  கொதிக்க  வைத்து  இறக்கவும்.
முந்திரிப் பருப்பை  சீவிப்  போட்டு சூடாகவோ,  குளிர  வைத்தோ கப்புகளில் ஊற்றி  பாயசத்தைப்  பரிமாறவும். 

இதில் பாலின் அளவைக் குறைத்து மில்க்மெயிட் சேர்த்தும் செய்யலாம். ஆனால் முழுவதும் பாலில் செய்யும் சுவை இருக்காது.


அரிசிக்கு பதிலாக சிறுதானியத்தில் செய்யும் சுவையான பாயசம் இது.  

 





வியாழன், 7 மே, 2015

பால் பாயசம்

தேவை 

பால்---  1 லிட்டர்
அரிசி---3 டேபிள்  ஸ்பூன் 
சர்க்கரை--- 1 கப்
முந்திரிப்  பருப்பு--- 15
பாதாம் பருப்பு---10
ஏலக்காய்--- 8
குங்குமப்பூ---  சிறிது


செய்முறை

பாலை  குக்கரில்  விட்டு  அதில்  அரிசியை  நன்கு  களைந்து  போட்டு  ஆவி  வந்ததும்  வெயிட்டைப்  போடவும். கேசை சிம்மில்  அரை  மணி  நேரம்  வைக்கவும்.  அணைத்துவிடவும்.
 


 Displaying palpay1.JPG


 குக்கரைத்  திறந்து   கேசை  சிறிதாக  வைத்து  சிறிது  நேரம்  விடாமல்  கிளறவும்.


Displaying palpay3.JPG
 Displaying palpay2.JPG

அரிசி  வெந்து  பால்  கெட்டியாகி  இளமஞ்சள்  நிறமானதும்,  அதில்  சர்க்கரை  சேர்க்கவும்.  சர்க்கரை  கரைந்து  சேர்ந்து  கொண்டதும்,  முந்திரி,பாதாம் பருப்புகளை  மிக்சியில்  நைசாக  அரைத்து  சேர்க்கவும்.


 Displaying palpay4.JPG


ஏலக்காயைப்  போடி  செய்து  போட்டு,  குங்குமப்பூவை  போட்டு  மேலும் ஐந்து  நிமிடம்  கொதிக்க  வைத்து  இறக்கவும்.

 Displaying palpay5.JPG 



முந்திரிப்  பருப்பை  சீவிப்  போட்டு சூடாகவோ,  குளிர  வைத்தோ கப்புகளில் ஊற்றி  பாயசத்தைப்  பரிமாறவும்.   பார்ட்டிகளுக்கு  ஏற்ற  சுவையான  ரிச்சான  பாயசம்  இது!

இதற்கு நல்ல திக்கான பால் தேவை. இல்லையெனில் சிறிதளவு மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ளலாம்.முழுதும் பாலில் செய்யும்போது இருக்கும் சுவை மில்க்மெய்டில் செய்யும் பாயசத்தில் இருக்காது.