வியாழன், 16 ஜூன், 2016

பனீர் பாயசம்

தேவை
கொழுப்பு நீக்காத பால் - 2 கப்
பன்னீர் துருவல் -  3/4 கப்
சர்க்கரை  - 1/4 கப்
கண்டஸ்ட் மில்க்  - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி,பாதாம் பருப்பு வகைகள்(சிறு துண்டுகளாக்கியது) ஒரு கைப்பிடி
பாதாம் பால் - 1/4 கப்
குங்குமப்பூ  - 4,5 இதழ்கள்
ரோஜா அல்லது வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை
பன்னீரை  கேரட் துருவி மூலம் துருவிக் கொள்ளவும்.15 பாதாம்களை  சூடான பாலில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பாலை நன்கு காய்ச்சி அதில் சர்க்கரை  சேர்த்து,அந்த பால் கலவையை 5 நிமிடம் கொதிக்க விடவும். பாதாம் பாலை சேர்க்கவும்.ஏலப்பொடி மற்றும் கண்டஸ்ட் மில்க்கை சேர்க்கவும்.




ஐந்து  நிமிடம் கொதித்தபின் துருவிய பன்னீரை சேர்க்கவும். மேலும் ஐந்து நிமிடம் கொதித்த பின்  வெனிலா அல்லது ரோஜா எசன்ஸை சேர்க்கவும். குங்குமப்பூ சேர்க்கவும்.பாயசம் கெட்டியாக ஆன பின் அடுப்பை அணைக்கவும்.

இக்கலவை ஆறியவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பின்னர் பொடித்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.




இதை கண்டஸ்ட் மில்க், எசன்ஸ் சேர்க்காமலும் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வரும்போது எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக