Saturday 18 June 2016

ஜவ்வரிசி உப்புமா

தேவை
மீடியம் அளவு ஜவ்வரிசி – 1 கப்
தண்ணீர் – 1 கப்
நிலக்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் –5
தேங்காய்  துருவல் ​ --  1/4 கப்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
தாளிக்க – கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை
ஜவ்வரிசியை நன்றாக கழுவி விட்டு கால் மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு ஈரப் பதத்திலேயே
ஒரு மணி நேரம் ஊற வைத்து விடவும்.

நிலக்கடலையை தோல்நீக்கி,சற்று வறுத்து பொடியாக்கவும்.தேங்காய்,3 பச்சை மிளகாயை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து
ஊறவைத்த ஜவ்வரிசியும், உப்பும் சேர்த்து சில  நிமிடங்களுக்கு வதக்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி, கடலைப் பொடியை சேர்த்து கிளறவும் அடுப்பை அணைத்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு மூடி வைக்கவும்.
 
பின் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவி நன்கு கலந்து பரிமாறவும்.

No comments:

Post a Comment