பஞ்சாபில் செய்யப்படும் இந்த தட்கா சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட நல்ல மேட்ச்.
பயத்தம் பருப்பு (அ )மசூர் தால் - அரை கப்
சீரகம் - கால்
டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
பச்வ்சை மிளகாய் - 2
பச்வ்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு
டீஸ்பூன்
காரப்பொடி, மஞ்சள்பொடி - தலா கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 2
டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
பயத்தம்பருப்பை நன்கு வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி -
பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி
சேர்த்து மேலும் வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், காரப்பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த பயத்தம் பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
நெய்யில் சீரகம், மிளகாய் வற்றல்,கரம் மசாலா சேர்த்து தாளித்து தட்காவில் கொட்டவும்.
எலுமிச்சைச் சாறு சேர்த்து,
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக