புதன், 8 ஜூன், 2016

பீஸ் பனீர் புலாவ்

பச்சை பட்டாணி - 1/2 கப்
(காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.)
பனீர் - 100 கிராம்
(சிறிய சதுரங்களாக வெட்டி எண்ணையில் இளஞ்சிவப்பாக பொரித்து வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும்.)
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
நெய் - 3 டீஸ்பூன் 
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்ப்பால் - 1/2 கப்
மல்லி தழை - சிறிது
அரைக்க:
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
தாளிக்க
பிரிஞ்சி இலை -2
கறிவேப்பிலை - சிறிது
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறு் துண்டு
நெய் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவைக்கு



செய்முறை

காய்ந்த பட்டாணியாக இருந்தால் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணி என்றால் உடனடியாக சமைக்கலாம்.

பாசுமதி அரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.



அதனுடன் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி பட்டாணியும் சேர்த்து நன்கு வதக்கவும்.



அதில் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேங்காய்ப் பாலுடன், மேலும் 3/4 கப் நீர் சேர்த்து, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெய்ட் போடவும்.

கேஸை சிம்மில் வைத்து 10  நிமிடம் வைத்திருந்து அணைக்கவும்.மூடியை திறந்து பனீர் துண்டுகளை சேர்க்கவும்.

நெய்யில் மிந்திரி, திராட்சை, கரம் மசாலா சேர்த்து வதக்கி புலாவில் சேர்க்கவும்.

நறுக்கிய கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு முறை அடி வரை கிளறி விட்டு பின் பரிமாறவும். சுவையான பீஸ் புலாவ் ரெடி.



ராய்தா, பொரித்த அப்பளத்துடன் சாப்பிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக