தேவை
ரவை - 1 கப்
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 /2 கப்
திராட்சை - 50 கிராம்
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 /2 கப்
திராட்சை - 50 கிராம்
அன்னாசி துண்டுகள் - 1/4 கப்
சர்க்கரை - 11/4 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி - 10
சர்க்கரை - 11/4 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி - 10
பால் - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
ஏலப்பொடி - 2 சிட்டிகை
குங்குமப்பூ - சில இதழ்கள்.
செய்முறை
ஆப்பிள், திராட்சையை சிறு துண்டுகளாக்கவும்.அவற்றை 1/2 கப் சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.
முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு முந்திரி வறுத்து எடுத்து ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.
அதில் பால் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்.இல்லையெனில் கட்டி தட்டிவிடும். கிளறுவது கஷ்டம்.
ரவை நன்றாக வெந்த பிறகு சர்க்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
எல்லாம் சேர்ந்து கொண்டு கெட்டியானதும், நெய்யை விட்டுக் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தபின் குங்குமப்பூ, ஏலப்பொடி,வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.இதற்கு கேசரி பவுடர் சேர்க்க தேவையில்லை.
சுவையான ஃப்ரூட் கேசரி ரெடி. பார்ட்டிகளுக்கு ஏற்ற இனிப்பு இது.
இதில் மாம்பழம், பலாப்பழம் இருந்தாலும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சேர்க்க சுவை அருமையாக இருக்கும்.
அதற்கேற்றவாறு சர்க்கரையை சற்று அதிகமாக சேர்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக