சனி, 14 மே, 2016

டொமாடோ பீஸ் புலாவ்

தேவை
பாஸ்மதி அரிசி   11/2 கப்
தக்காளி   5
பட்டாணி    1/2 கப்
பெரிய வெங்காயம்  2
மஞ்சள்பொடி   1/4 டீஸ்பூன்
காரப்பொடி   1 டீஸ்பூன்
கரம் மசாலா  1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  1/2 டீஸ்பூன்
எண்ணெய்  3 டீஸ்பூன்
நெய்  4 டீஸ்பூன்
தாளிக்க
ஜீரகம்  1 டீஸ்பூன்
ஏலம்   3
கிராம்பு  3
பட்டை  சிறுதுண்டு
பிரிஞ்சி இல்லை   2
கொத்துமல்லி, கறிவேப்பிலை  சிறிது
வறுத்த கடலை  2 டீஸ்பூன்
முந்திரி  10


செய்முறை
அரிசியைக்  களைந்து, தண்ணீரை வடித்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஊறிய அரிசியை வடித்து, ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி எடுத்து வைக்கவும்.



குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், ஏலம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை வதக்கி, அத்துடன் துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கி, பட்டாணி சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் வதக்கி, அதில் தக்காளி துண்டங்களை சேர்த்து நன்கு வெந்து விழுதாகும்வரை கிளறவும்.


அத்துடன் மஞ்சள்பொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து கிளறி, ஒன்றரை கப் நீர் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்க்கவும்.நெய்யில் வதக்கிய அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்.


குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு கேசை சிம்மில் வைத்து, 10 நிமிடம் ஆனதும் அணைக்கவும்.
நெய்யில் முந்திரி, கடலை வறுத்துப் போட்டு, மேலே கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு பரிமாறவும்.
சுலபமாக செய்யக் கூடிய டேஸ்டி புலாவ்!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக