ஞாயிறு, 8 மே, 2016

பொரித்த குழம்பு


தேவை
புடலங்காய் -- ½ கிலோ
பயத்தம்பருப்பு -- ½ கப்
உப்பு -- தேவையான அளவு
கறிவேப்பிலை -- 2 கொத்து

வறுத்து அரைக்க
பெருங்காயம்--- சிறிய துண்டு
உளுத்தம்பருப்பு--- 2 தேக்கரண்டி
மிளகு--- ½ தேக்கரண்டி
மிளகாய் வற்றல்--- 2
தேங்காய்த் துருவல்--- ¼ கப்

தாளிக்க
தேங்காய் எண்ணை--- 2 தேக்கரண்டி
கடுகு--- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு--- 1½ தேக்கரண்டி
நிலக்கடலை-- 2 தேக்கரண்டி



செய்முறை
புடலங்காயை சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேகவிடவும். எண்ணையில் பெருங்காயம், உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து தேங்காய்த் துருவலுடன் தேவையான நீர் சேர்த்து நைஸாக, விழுதாக அரைக்கவும்.





                           
புடலங்காயில் முழுகும் அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.அத்துடன் தேவையான உப்பும், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கவும்.நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் வெந்த பருப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.



இரும்புக் கரண்டியில் தேங்காய் எண்ணை விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலை சேர்த்து சிவந்ததும் குழம்பில் கொட்டவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
சுவையான பொரித்த குழம்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இதை புடலங்காய் தவிர முருங்கைக் காயிலும் செய்யலாம்.








1 கருத்து: