சனி, 7 மே, 2016

கீரை பொரித்த குழம்பு


தேவை
கீரை (முளைக்கீராய், அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை ஏதாவது ஒன்று ) ஒரு சிறிய கட்டு
உருளைக் கிழங்கு 1
மிளகு  6
தனியா  ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3 
தேங்காய்த் துருவல்  1/4 கப் 
பயத்தம்பருப்பு  6 டீஸ்பூன்
சீரகம்  ஒரு டீஸ்பூன்
கடுகு  அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறுதுண்டு 
எண்ணெய்  2 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு.
செய்முறை
கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைக் கிழங்கை சிறுதுண்டுகளாக நறுக்கவும்.
பெருங்காயம், தனியா, மிளகு,  மிளகாய் வற்றல் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். 
பயத்தம்பருப்பு தனியே வேகவிடவும். கீரையும், உருளைக்கிழங்கும் சேர்த்து  உப்பு சேர்த்து வேகவிடவும். அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். 
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம்,  தாளித்து, கீரையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இதை சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட்டால், சுவையில் அசத்தும். இதற்கு உருளை ரோஸ்ட் சிறந்த காம்பினேஷன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக