ட்ரை - ஃப்ரூட்ஸ் ஸ்வீட் பொங்கல்
தேவை
அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 2 tbsp
காய்ச்சிய பால் - 2 கப்
முந்திரி - 5
பாதாம் - 5
பேரீச்சை - 5
உலர் திராட்சை - 2 tsp
நெய் - 3 tbsp
சர்க்கரை - 1 கப்
செய்முறை
அரிசி மற்றும் கடலை பருப்பை வாசனை வரும் வரை வெறும் வாணலியில்
வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாலை திக்காக நன்கு காய்ச்சி கொள்ளவும். பேரீச்சை, உலர் திராட்சை மற்றும் ஊற வைத்த முந்திரி - பாதாமை
மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வெண்கலப்பானை அல்லது வாணலியில் 1
கப் பால் + 2 கப் தண்ணீர் விட்டு , கொதித்ததும், அடுப்பை sim ல்
வைத்து , பொடித்ததைப் போட்டு கட்டிகள் இல்லாமல் கிளறவும்.
நன்றாகக் குழைந்து வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும். பிறகு அரைத்த விழுதை
கொட்டி இரண்டு நிமிடங்கள் கிளறி , மீதி 1 கப் பாலை சேர்த்து கலக்கவும். பால் எல்லாம் நன்றாக உறிஞ்சிய பிறகு அடுப்பை
அணைத்து மேலாக நெய்யை ஊற்றி கிளறவும். (விருப்பப்பட்டால் நெய்யில் முந்திரி தாளிக்கலாம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக