தேவை
வறுத்த ரவா -- 1கப்
வறுத்த சேமியா -- 1/2 கப்
கடலைப்பருப்பு -- 1/4 கப்
துவரம்பருப்பு -- 5 டீஸ்பூன்
இஞ்சி -- சிறுதுண்டு
முந்திரி -- 10
திராட்சை -- 10
தேங்காய்ப்பால் -- 1/2 கப்
கறிவேப்பிலை -- 1 கொத்து
மிளகு -- 1/2 டீஸ்பூன்
மிளகு சீரகப்பொடி -- 1 டீஸ்பூன்
நெய் -- 6 டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
கடைகளில் ரோஸ்டட் ரவாவும், சேமியாவும் கிடைக்கும். அவற்றை உபயோகித்து பொங்கல் செய்யலாம்.
பருப்புகளை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். குக்கரில் வேகவிடவும்.
2
கப் தண்ணீருடன் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சேமியாவை
சேர்க்கவும்.
முக்கால் அளவு வெந்ததும், அத்துடன் ரவாவை சேர்த்து
வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
இரண்டையும் சேர்த்து வேகவிட்டால் ரவை அதிகம் வெந்து கூழாகி விடும்.
வாணலியில்
நெய்யை விட்டு இஞ்சி,மிளகு, முந்திரி, திராட்சை, மிளகு சீரகப்பொடி,
கறிவேப்பிலை போட்டு வதக்கி பொங்கலில் கொட்டி நன்கு கலக்கவும்.
ரவா,சேமியா சரி அளவு சேர்த்தும் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக