வெள்ளி, 15 மே, 2015

அரிசி பிட்டு



பெண் குழந்தைகள் வயதுக்கு வரும்போது பிட்டு செய்து கொண்டாடுவது நம் வழக்கம். இந்நாளில் அந்த வழக்கம் குறைந்து விட்டது. பாரம்பரிய இனிப்பு இந்த அரிசி பிட்டு.


தேவை 

அரிசிமாவு-- 1 கப்
வெல்லம்-- 1 கப்
நெய்-- ½ கப்
ஏலக்காய்—8
மிந்திரிபருப்பு—15
திராட்சை—15

தேங்காய்த்துருவல்-- ½ கப்


Displaying pittu1.JPG



செய்முறை

அரிசிமாவை  வெறும்  வாணலியில்  போட்டு  சிவக்க  வறுக்கவும்.


 Displaying pittu2.JPG

½ கப்  தண்ணீரைக்  கொதிக்க வைத்து  அதில்  மஞ்சள்  பொடி, சிட்டிகை உப்பு  சேர்த்து  கை  பொறுக்கும்  சூட்டில்  வறுத்த மாவில்  சிறிது, சிறிதாக  விட்டு  பிசிறவும்.மாவு  மொத்தையாகக்  கூடாது.  உதிராக  இருக்க வேண்டும்.



   Displaying pittu3.JPG                                      Displaying pittu5.JPG





அதை  ஒரு  சல்லடையில்  சலித்தால்  கீழே  கட்டி  இல்லாமல்  விழும். இதை இட்டிலித்தட்டில்  அள்ளி  வைத்து  வெயிட்  போடாமல் ஆவியில்  வேகவிட்டு ஒரு  தட்டில்  கொட்டவும். இதே  போல்  எல்லா  மாவையும்  வேகவிடவும்.


 Displaying pittu7.JPG                                            Displaying pittu9.JPG



.

ஆறியதும்  நன்கு  உதிர்க்கவும். அத்துடன்  துருவிய  தேங்காய் சேர்த்துஏலக்காயைப்  பொடி  செய்து  போட்டு  கலக்கவும்.


 வெல்லத்தை  1 கரண்டி  தண்ணீர்  சேர்த்து  பாகு  வைக்கவும்.  வெல்லம் கரைந்ததும்  வடிகட்டி  மீண்டும்  பாகு  வைக்கவும். நல்ல  கெட்டிப்பாகு (தண்ணீரில்  ஒரு  ஸ்பூன்  பாகை  விட்டால்  உருண்டு வரும். தொய்யக்கூடாது.) 




  Displaying pittu10.JPG


பதம்  வந்ததும்  அதைக்  கொஞ்சம்  கொஞ்சமாக எடுத்து  உதிர்த்த  பிட்டில்  விட்டு  வேகமாகக்  கலக்கவும்.  பாகு  நன்கு பரவியதும்  கட்டியாகாமல்  கைகளால்  நன்கு  கலக்கவும்.  பிட்டு  பாகுடன் சேர்ந்து  கொண்டு  நன்கு  உதிராக  வரும்.


 Displaying pittu11.JPG

நெய்யை  சுடவைத்து  அதில்  மிந்திரிதிராட்சை  வறுத்துப்  போட்டு நன்கு  கலக்கவும்.  மணமணக்கும்  பிட்டு  வாயில்  போட்டால்  கரையும்.


 Displaying pittu13.JPG



சில  குறிப்புகள்

அரிசிமாவு  நல்ல  நைஸாக  இருக்க  வேண்டும்.

மாவை  ப்ரௌன்  நிறம்  வரும்வரை  வறுக்க  வேண்டும். 
கையால்  கோலம் போடும்  பதமாக  இருக்க  வேண்டும்.

வென்னீர்  விட்டுப்  பிசையும்போதே  மாவு  உதிராக  இருக்க  வேண்டும்.

மொத்தையாக  இருந்தால்  பிட்டும்  களி  மாதிரி  ஆகிவிடும்.

பாகு  நல்ல  கெட்டிப்  பாகாக இருக்க  வேண்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக