செவ்வாய், 5 மே, 2015

மொச்சைக் கொட்டை சுண்டல்


தேவை                            

மொச்சைக்  கொட்டை - 2 கப்
தேங்காய்த்  துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான  அளவு

வறுத்து  பொடி  செய்ய

எண்ணை - தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு  துண்டு
தனியா - 2 தேக்கரண்டி
 மிளகாய்  வற்றல் - 4

தாளிக்க
எண்ணை - தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பச்சை  மிளகாய் - 2
கறிவேப்பிலை

செய்முறை

மொச்சைக்கொட்டையை   தேவையான  உப்பு  சேர்த்து  குக்கரில்  வேகவிடவும்.

வறுக்கக்  கொடுத்துள்ள  சாமான்களை  எண்ணையில்  வறுத்து  மிக்ஸியில்  பொடி  செய்யவும்.

வாணலியில் எண்ணை சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து  அதில்  வெந்த  மொச்சைக்கொட்டையைப்  போட்டு  கிளறவும்.

அதில்  செய்த  பொடியைப்  போட்டுதேங்காய்த்  துருவலையும்  சேர்க்கவும்.நன்கு  கிளறி  இறக்கவும்.

இந்த  சுண்டலில்  விருப்பப்  பட்டவர்கள்  பொடியாக நறுக்கிய இஞ்சி,வதக்கிய  வெங்காயம்துருவிய  கேரட், கரம் மசாலா   சேர்த்தும்  செய்யலாம். வித்யாசமான  சுவையில்  ருசியாக  இருக்கும்.

புரோட்டீன்  சத்து  நிறைந்த  மொச்சைக்கொட்டை  அதிகம்  கிடைக்கும் சீஸன்  இது.  சத்தான இந்த  சுண்டல்  செய்வதும்  எளிது. குழந்தைகள்  முதல்  முதியோர்  வரை  அனைவரும்  சாப்பிட  ஏற்றது. 




 Displaying mochaikottai sundal.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக