தேவை
சின்ன வெங்காயம் (உரித்தது) ---1 கப்
தக்காளி--- 1
சின்ன
உருளைக் கிழங்கு--- 6
துவரம்பருப்பு--- ¼ கப்
புளி--- ஒரு சிறு
எலுமிச்சை அளவு
மஞ்சள்பொடி-- சிறிது
வறுத்து அரைக்க
உளுத்தம்பருப்பு--- 1 தேக்கரண்டி
கடலைப்
பருப்பு---
1 ½ தேக்கரண்டி
தனியா-- 2
தேக்கரண்டி
மிளகாய்
வற்றல்--
4
வெந்தயம்--- ⅛ தேக்கரண்டி
சீரகம் ----½ தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்-- ¼ கப்
பெரிய வெங்காயம்--- சிறியது-- 1
தக்காளி--- பாதி
தாளிக்க
நெய்---2
தேக்கரண்டி
எண்ணெய் ----2 தேக்கரண்டி
கடுகு-- 2
தேக்கரண்டி
பச்சை
மிளகாய்----
2
உப்பு,
எண்ணை
-- தேவையான
அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி
செய்முறை
புளியைத்
தண்ணீர் சேர்த்து
2 கப்புகள் வரும்படி
கரைத்துக்
கொள்ளவும். துவரம்
பருப்பை வேகவிட்டுக்
கொள்ளவும்.
இரண்டு
தேக்கரண்டி எண்ணையில்
வறுக்கக் கொடுத்துள்ள
சாமான்களை
வரிசையாக வறுக்கவும். தக்காளி,
வெங்காயத்தை தனியாக
வதக்கவும்.
இவற்றோடு 4 தேக்கரண்டி தேங்காய்த்
துருவல் சேர்த்து
நைசாக
அரைக்கவும்.மீதியுள்ள தேங்காயை
2 தேக்கரண்டி நெய்யில்
சற்று
சிவப்பாக வறுத்து
வைக்கவும்.
இரண்டு தேக்கரண்டி எண்ணையில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து அதில் உரித்த வெங்காயம், பாதி தக்காளி, தோலி நீக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து சற்று வதக்கவும். புளி கரைத்த நீரை விடவும். மஞ்சள்பொடி சேர்க்கவும்.
தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து உருளைக்கிழங்கு வெந்ததும் அரைத்த கலவையையும், வெந்த துவரம்பருப்பும் சேர்த்து கொதிக்க விடவும். மேலே 1 தேக்கரண்டி நெய்யை சுட வைத்து விடவும்.
வறுத்த
தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.சேர்ந்து கொதித்ததும்
இறக்கி கொத்துமல்லி,
கறிவேப்பிலை
சேர்த்து இட்லி,
தோசை. பொங்கல்,
வடையுடன் பரிமாறவும்.
இந்த
சாம்பாருக்கு பெரிய
வெங்காயம் போட்டு
செய்தாலும்
நன்றாக இருக்கும்.
சாம்பார்
கொஞ்சம் நீர்க்க
இருந்தால்தான் இட்லி,
தோசைக்கு தொட்டுக் கொள்ள
ருசியாக இருக்கும்.
ஹோட்டல்
சாம்பாரைவிட இது
இன்னும்
சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக