Thursday 21 May 2015

வேப்பம்பூ ரசம் (1)


தேவை

துவரம் பருப்பு - 5 டீஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம்
மிளகாய் வற்றல் 4
பச்சை மிளகாய் 2
ரசப்பொடி 1 டீஸ்பூன்

தாளிக்க  

வேப்பம்பூ
நெய் 
கடுகு 
கறிவேப்பிலை

செய்முறை

இந்த ரசத்திற்குப் பருப்பு குறைவாகவும், புளிப்பு சற்று கூடுதலாகவும் இருந்தால்தான் ருசியாக இருக்கும்.

புளியை நீரில் 2 கப் அளவு கரைத்து அதில் உப்பு, பொடி, பெருங்காயம், கிள்ளிய பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும். 

நன்கு கொதித்து 1 கப் அளவு ஆனதும் பருப்பு ஜலம் விட்டு விளாவி நுரைத்து வந்ததும் இறக்கவும். 

இரண்டு டீஸ்பூன் நெய்யில் வேப்பம் பூவை இளஞ்சிவப்பாக வறுத்துக் கொட்டவும். கருகினால் கசந்துவிடும்.

இன்னொரு ஸ்பூன் நெய்யில் கடுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வேப்பம்பூவை வறுத்துப் போட்டு கொதிக்க விடக்கூடாது. கீழே இறக்கிய பின்பே வறுத்துப் போட வேண்டும்.





No comments:

Post a Comment