தேவை:
புளி-- ஒரு சிறிய எலுமிச்சை அளவு
மிளகுப் பொடி-- 2½ டீஸ்பூன்
துவரம்பருப்பு--- 6 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்-- 1 சிறு துண்டு
உப்பு--- தேவையான அளவு
தக்காளி-- சிறியது 1
கடுகு-- 1 டீஸ்பூன்
நெய்--- 2 டீஸ்பூன்
கருவேப்பிலை-- 2 கொத்து
செய்முறை
புளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும்.மிளகை லேசாக வறுத்து
பொடி செய்து கொள்ளவும்.துவரம்பருப்பை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்.
1½ கப் நீரில் புளியைக் கரைத்து ஒரு காப்பர் பாட்டம் பாத்திரத்தில்
ஊற்றி கொதிக்க விடவும்.
அதில் பெருங்காயம், தேவையான உப்பு, மிளகுப் பொடி, சிறு
துண்டங்களாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு புளி வாசனை போய் கொதித்து 1 கப்பாக குறைந்ததும், வெந்த
துவரம்பருப்பை நீரில் கரைத்து 1½ கப் அளவுக்கு
சேர்க்கவும்.
மேலே நுரைத்து வந்ததும், இறக்கி வைத்து, நெய்யை காய வைத்து அதில் கடுகு
போட்டு வெடித்ததும், அதனுடனேயே கறிவேப்பிலையும் சேர்த்து
ரசத்தில் கொட்டவும்.
சளி, சுரம்
வந்த நேரங்களில் சூடாக இந்த ரசத்தை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி விடவும்.
மிளகுடன் ½ டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து போட்டால் வாசனையாக இருக்கும்.
ரசத்திற்கு நெய்யில் கடுகு தாளித்தால்தான் நல்ல வாசனையாக இருக்கும்.
ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி விடவும்.
மிளகுடன் ½ டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து போட்டால் வாசனையாக இருக்கும்.
ரசத்திற்கு நெய்யில் கடுகு தாளித்தால்தான் நல்ல வாசனையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக