சனி, 23 மே, 2015

நேந்திரங்காய் வறுவல்


 தேவை
நல்ல காயான நேந்திரன் வாழைக்காய்கள்---6
உப்பு பொ டி ---2 தேக்கரண்டி
வேகவிட தேவையான எண்ணெய்
செய்முறை
நேந்திரன் காய்களை அலம்பி,காம்பையும், கீழ்பாகத்தையும் நறுக்கி விட்டு தோலியை உரித்துக் கொள்ளவும். இந்தப் பழத்தில் தோலியை நறுக்க வேண்டாம். உரித்தாலே வந்துவிடும்.

சீரான அளவில் வட்டமாக சீவி, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும். நேரடியாக எண்ணையிலும் சீவலாம். 

உப்பை அரை கப் அளவு தண்ணீரில் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வாழைத் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுக்கவும். சற்று வெந்ததும், உப்புத் தண்ணீர் 1/4 ஸ்பூன் எடுத்து, வெந்து கொண்டிருக்கும் வறுவலில் விடவும். 
சலசலவென்று வெந்ததும்  எடுக்கவும்.வடியவைத்து எடுத்து வைக்கவும்.இதற்கு காரம் தேவையில்லை.


வேகும்போதே உப்புத்  தண்ணீர் விடுவதால் இதற்கு மறுபடி உப்பு போடத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக