Tuesday 5 May 2015

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

தேவை 

மாகாளிக் கிழங்கு - ½ கிலோ
லேசாகப் புளித்த தயிர் - கப்
மிளகாய்வற்றல் - 15
உப்பு - 1/8 கப் 
மஞ்சள்பொடி - 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி

 
செய்முறை

ரத்த விருத்தி செய்யும் இந்த மாகாளிக் கிழங்கின் வித்யாசமான மணம் பலருக்கு பிடிக்காது. இளசான மாகாளிக் கிழங்கை வாங்கி  3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு தேய்த்து அலம்பவும். 

அதன் மேல் தோலை கத்தியால் சீவி, அதை இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் தண்டை நீக்கவும். மீதமுள்ள கிழங்கை பொடியாக நறுக்கவும். கறுக்காமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்கவும். 

1/4 கப் தயிருடன் மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள்பொடியை நைசாக அரைக்கவும். மீதமுள்ள தயிருடன் அரைத்த விழுதைக் கலக்கவும். 


நறுக்கிய மாகாளித் துண்டங்களை ஒரு ஜாடியில் போட்டு, உப்பைப் போட்டு கலந்து வைக்கவும். அத்துடன் மிளகாய்  விழுது கலந்த தயிரைக் கலக்கவும். மருத்துவ குணம் கொண்ட மாகாளிக் கிழங்கு ஊறுகாய் சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். 

Displaying maakalik kizhangu oorukaay.JPG



No comments:

Post a Comment