திங்கள், 23 டிசம்பர், 2013

பிசிபேளாபாத்

Displaying b.b11.JPG

தேவை
அரிசி-- 1  கப்
பீன்ஸ்காரட்உருளைக்கிழங்குகத்தரிமுருங்கை---நறுக்கிய  துண்டங்கள்--- 2 கப்
உரித்த  பச்சைப் பட்டாணி--- 1/4 கப்
புளி--- எலுமிச்சை  அளவு
துவரம்பருப்பு-- 1/2 கப்
உப்பு --- தேவையான  அளவு
மஞ்சள்பொடி--- 1/4 தேக்கரண்டி
நெய்--- 1/8 கப்
எண்ணை--- 1/4 கப்

வறுத்து  அரைக்க
பெருங்காயம்--- 1 சிறு துண்டு
உளுத்தம்பருப்பு--- 1  தேக்கரண்டி
கடலைப்  பருப்பு-- 2 தேக்கரண்டி
தனியா--- 3 தேக்கரண்டி
மிளகாய்  வற்றல்--- 10- 12
வெந்தயம்--- 1/4 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்--- 1/4 கப்

பொடிசெய்ய
ஏலக்காய்-- 2
ஜாதிக்காய்--  சிறு துண்டு
கிராம்பு--  2
பட்டை--- சிறு  துண்டு
தாளிக்க
கடுகு--- 4 தேக்கரண்டி
பச்சை  மிளகாய்--- 3
கொத்துமல்லி
கறிவேப்பிலை

செய்முறை
அரிசியை  தண்ணீரைக்  கொஞ்சம்  அதிகமாக  வைத்து  குழைய  வேகவிடவும்.  துவரம்பருப்பையும்  வேகவிட்டுக்  கொள்ளவும்.

காய்கறிகளை  சிறு  துண்டுகளாக்கி  சிறிது  உப்பும்,  மஞ்சள்பொடியும்  சேர்த்து  நசுங்கும்  பதமாக  வேகவிட்டுக்  கொள்ளவும்.  

வறுக்கக்  கொடுத்துள்ள  சாமான்களுடன்  பாதியளவு  தேங்காய்த்  துருவலை  3  தேக்கரண்டி  எண்ணையில்  சிவக்க  வறுத்து  மிக்ஸியில்  பொடி  செய்யவும்.  மீதமுள்ள  தேங்காய்த்  துருவலை  சிவக்க  வறுத்து  எடுத்து  வைத்துக்  கொள்ளவும்.

பொடி  செய்யக்  கொடுத்துள்ள  மசாலா  சாமான்களை  எண்ணையில்லாமல்  லேசாக  வறுத்துப்  பொடிக்கவும்.


புளியை  3 கப்  தண்ணீர்  சேர்த்து  கரைத்துக்  கொள்ளவும்.


வெந்த  சாதத்தை  குக்கரில்  போட்டு  நன்கு  கிளறவும்.  அதில்  கரைத்த  புளியை  விட்டு  சிட்டிகை  மஞ்சள்  பொடி  சேர்த்துக்  கொதிக்க  விடவும். சிறிது  நேரம்  கொதித்து  புளி  வாசனை  போனதும்,  வெந்த  காய்கறிகளைச்  சேர்க்கவும். தேவையான  உப்பு  சேர்க்கவும்.


எல்லாம்  சேர்ந்து  கொதித்து  கெட்டியானதும்,  வறுத்து  அரைத்த  பொடி,  வெந்த  துவரம்பருப்பு  சேர்த்து  கொதிக்க  விடவும். மேலே  வறுத்த  தேங்காய்,  மசாலாப்  பொடி  சேர்த்து  நன்கு  கிளறி  விடவும்.


மீதமுள்ள  எண்ணையில்  கடுகு,  பச்சைமிளகாய்  தாளித்துக்  கொட்டவும்.  நெய்யை  காயவைத்து  மிந்திரி,  திராட்சை  வறுத்துப்  போடவும்.  கொத்துமல்லி,  கறிவேப்பிலையைக்  கிள்ளிப்  போடவும்.
 மணமான பிசிபேளாபாத்  பொரித்த  அப்பளம்,  அவியல், உருளை  ரோஸ்ட்டுடன்  அருமையாக  இருக்கும்.

குறிப்பு

இதில்  விருப்பப்  பட்டால்  வெங்காயம்  பொடியாக  நறுக்கி  வதக்கி  சேர்க்கலாம்.  பூண்டு  வதக்கி  சாமான்களுடன்  அரைத்து  சேர்க்கலாம். கர்நாடகத்தின்  மிக  பிரபலமான  சிறப்பான  .உணவு  இது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக