சனி, 20 ஜூன், 2015

வாங்கிபாத் (கத்தரிக்காய் சாதம்)

தேவை

கத்தரிக்காய்--- ¼ கிலோ
பெரிய வெங்காயம்---2
உப்பு---தேவையான அளவு
எலுமிச்சம்பழம்---1 மூடி
மஞ்சள்பொடி---சிறிது
வறுத்து பொடி செய்ய
கடலைப் பருப்பு---2 தேக்கரண்டி
தனியா----3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்---4
தேங்காய்த்துருவல்---6 தேக்கரண்டி
பெருங்காயம்----1 சிறுதுண்டு
நல்லெண்ணெய்----6 தேக்கரண்டி

தாளிக்க

கடுகு----1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு----1 தேக்கரண்டி
நிலக்கடலை---3 தேக்கரண்டி
பச்சை மிளகாய்---3
கறிவேப்பிலை---1 கொத்து

செய்முறை

சாதத்தை உதிராக வடித்து, அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு ஆற வைக்கவும்.

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தைபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


நான்கு தேக்கரண்டி எண்ணையில் பொடி செய்யக் கொடுத்திருப்பவற்றை, தனித் தனியாக பொன் வறுவலாக வறுத்து, மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.


மீதி எண்ணையில்தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாகப் போட்டு வறுபட்டதும், வெங்காயம் சேர்த்து சற்று வதக்கி, கத்தரிக்காயையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.



ஆறிய சாதத்தில், வதக்கிய கத்தரிக்காய், செய்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். மேலே எலுமிச்சை சாறுபிழியவும்.


இதில் நிலக்கடலையை அப்படியே தாளிக்காமல், வெறும் வாணலியில் சற்று வறுத்து பொடி செய்தும் சேர்க்கலாம்.

ராய்த்தா, அப்பளம், வறுவலுடன் சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக