தேவை சின்ன வெங்காயம் (உரித்தது) -- 1 கப் முள்ளங்கி-- 1 தக்காளி-- 4 புளி-- எலுமிச்சை அளவு மஞ்சள்பொடி-- 1 தேக்கரண்டி தனியாபொடி-- 1 1/2 தேக்கரண்டி காரப்பொடி-- 2 தேக்கரண்டி நல்லெண்ணை--- 8 தேக்கரண்டி
வதக்கி அரைக்க
தேங்காய் துருவல்-- 4 தேக்கரண்டி பேரீச்சம்பழம்-- 6 முந்திரிப் பருப்பு-- 8 பாதாம்-- 8 திராட்சை-- 10
பச்சை மிளகாய்-- 2
தாளிக்க
கடுகு-- 1 தேக்கரண்டி சீரகம்-- 1 தேக்கரண்டி வெந்தயம்-- 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை கொத்துமல்லி உப்பு-- தேவையான அளவு
செய்முறை
முள்ளங்கியை வட்டத் துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு எடுத்து வைக்கவும்.
புளியை 3 கப் நீர் சேர்த்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக்கவும். 2 தேக்கரண்டி எண்ணையில் வதக்கக் கொடுத்துள்ள சாமான்களை சற்று வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். நல்லெண்ணையை வாணலியில் விட்டுக் காய்ந்ததும் அதில் சீரகம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, அதிலேயே உரித்த வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதகியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தக்காளி நன்றாக வெந்து சேர்ந்து கொண்டதும் அதில் மஞ்சள் பொடி, தனியாபொடி, காரப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணை பிரிந்ததும் அதில் புளிக் கரைசலை விடவும்.
.
சற்று கொதித்து புளிவாசனை போனதும், அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
நன்கு கொதித்து சேர்ந்து கொண்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கவும் கொத்துமல்லி தழை சேர்த்து சாதத்துடன் சாப்பிடவும். வித்யாசமான சுவையில் இந்த கமகம அறுசுவைக்குழம்பு நொடியில் காலியாகிவிடும்!!
குறிப்பு
இதில் முள்ளங்கிக்கு பதிலாக முருங்கை, உருளை, கத்தரி சேர்த்தும் செய்யலாம். முருங்கை மற்றும் கத்தரிக்காயை புளி கரைத்துவிட்டபின் நேரடியாக சேர்க்கவும். முன்னால் வேகவிட வேண்டாம். |
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!என் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது!
வியாழன், 13 மார்ச், 2014
அறுசுவைக் குழம்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக