செவ்வாய், 14 ஏப்ரல், 2015

கல்கண்டு வடை

இது செட்டிநாட்டு ஸ்பெ ஷலான இனிப்பு. வித்யாசமான சுவையுள்ள இந்த வடை செய்வது எளியது.


தேவை 
உளுத்தம்பருப்பு---1 கப் 
அரிசி-----1/4 கப்
கல்கண்டு---3/4 கப் 
ஏலப்பொடி--1 தேக்கரண்டி 
எண்ணெய்---வேகவிட 

செய்முறை 
அரிசி, உளுத்தம்பருப்பை சேர்த்து நனைத்து 2 மணி நேரம் ஊறவிடவும். தண்ணீரை ஒட்ட வடித்து, ஒரு தடியான துண்டில் உலர்த்தவும். 






கல்கண்டை பொடி செய்யவும். அரிசி, உளுந்தை மிக்சியில் சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும். கடைசியாக கல்கண்டு போடி சேர்த்து அரைக்கவும். கல்கண்டு சேர்த்ததும் கலவை தளர்ந்து விடும். அதனாலேயே முதலில் அரைக்கும்போது சிறிதும் நீர் சேர்க்கக் கூடாது. ஏலப்பொடி சேர்த்து கலக்கவும்.






இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் உளுந்து மெதுவடை தட்டுவது போல தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் போடவும். அடுப்பை சிறியதாக வைக்கவும். நன்கு வெந்து பிரவுன் கலரானதும் எடுக்கவும்.





இதில் கல்கண்டு சேர்ந்திருப்பதால் சாதாரண வடையைவிட சற்று அதிக ப்ரவுனாக இருக்கும். ஆனால் சுவை மிக அருமையாக இருக்கும்.நான்கு நாட்கள் வரை சாப்பிட நன்றாக இருக்கும்.






வித்யாசமான சுவையில் கல்கண்டு வடை இனிக்கும்!

 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக