Friday 3 April 2015

பால் கொழுக்கட்டை

தேவை:

அரிசி மாவு--1 கப் (அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்சியில் நைசாக அரைக்கவும்.)
அல்லது ரெடி கொழுக்கட்டை மாவு கடையில் வாங்கலாம்.
பால்---1 கப்
வெல்லம் --1 கப்
தேங்காய்ப்பால்---1/2 கப்
ஏலக்காய் ---6
நெய்---4 தேக்கரண்டி
குங்குமப்பூ---சில இதழ்கள்
உப்பு---1 சிட்டிகை

செய்முறை

1 மூடி தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுக்கவும்.

கப் தண்ணீரில் சிட்டிகை உப்பு, நெய்  சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசிமாவை சேர்த்து கட்டி தட்டாமல் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறவும்.

கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி, சற்று ஆறியதும் நன்கு பிசையவும்.

அந்த மாவை நன்கு தேய்த்துப் பிசைந்து, பட்டாணி அளவுள்ள சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

உருட்டிய அரிசி மாவு உருண்டைகளின் அளவுக்கு, தண்ணீரை கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளில் பாதி அளவைப் போடவும். அடுப்பை சின்னதாக வைத்து, மெதுவாகக் கிளறவும்.





மீண்டும் தண்ணீர் கொதித்ததும், மீதமுள்ள உருண்டைகளைப் போடவும். அடுப்பை பெரிதாக்கினாலும், அடிக்கடி கிளறினாலும் உருண்டைகள் கரைந்து விடும்.


10 நிமிடங்கள் வெந்ததும், பால் சேர்க்கவும். சற்று கொதித்ததும் வெல்லத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.


பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்க்கவும்.


சுவையான பால் கொழுக்கட்டை அருமையாக இருக்கும்.


3 comments:

  1. என்னுடைய பாட்டி பால் கொழுக்கட்டை, வெண்ணெய் புட்டு, வெந்தயக்களி, மொர்கூழ் என்று செய்து தருவார்கள். வெண்ணை புட்டு எப்படி செய்வது என்று ஒரு பதிவு இடுங்களேன். இன்று இருக்கும் அவசர உலகில் இது போன்ற வீட்டில் செய்யும் பலகாரங்கள் இனி பதிவில் மட்டுமே காண முடியும்.

    --
    Jayakumar

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை. என் அம்மாவின் கைப்பக்குவத்தில் திகட்டத் திகட்ட ருசித்திருக்கிறேன்.

    ReplyDelete