தேவையான பொருட்கள் :
மைதா- 2 கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்புத்தூள்- ஒரு சிட்டிகை துருவிய பனீர்- முக்கால் கப் துருவிய தேங்காய்- அரைகப் சர்க்கரை -1 கப் ஏலக்காய்-நான்கு பொடித்த முந்திரி -கால் கப் நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை :
மாவை சலித்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் சர்க்கரையைபப் பொடிக்கவும். ஏலக்காய் மற்றும் முந்திரியைப் பொடி செய்யவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பனீரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் .
பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ் சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பனீரில் கொட்டி கலக்கவும்.
பின்பு அதில் பொடித்த சர்க்கரை மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து மிக்சியில் இந்தக்கலவையை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதிக நேரம் அரைக்கக் கூடாது. நன்ஜ்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
பிறகு பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு
உருண்டையை எடுத்து எண்ணை தடவிய வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறு
வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி, கையால் உருட்டி உள்ளங்கையால் தட்டி அதனை போளிகளாக
இடவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்துஎடுக்கவும்.
வித்யாசமான பனீர் போளி தயார். |
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!என் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது!
போளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 25 ஏப்ரல், 2016
பனீர் போளி
வியாழன், 25 பிப்ரவரி, 2016
சர்க்கரை வள்ளிக் கிழங்கு போளி
தேவை
வேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு -- 1 கப்
வெல்லம்-----------1
1/2 கப்
தேங்காய்----- 1
மூடி
மைதா மாவு--- 1 1/2 கப்
ஏலக்காய்------ 10
கேசரி பௌடர்--- 1
சிட்டிகை
உப்பு--- 1 சிட்டிகை
நல்லெண்ணை--- சிறிதளவு
நெய்--- போளிகளில் தடவ தேவையான அளவு
செய்முறை
தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.ஏலக்காயை பொடி செய்யவும்.
மைதாமாவுடன் கேசரி பௌடர், உப்பு சேர்த்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவிட்டு, தோழி நீக்கி கட்டியில்லாமல்மசித்துக் கொள்ளவும்.
அத்துடன் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து
ஏலப்பொடியை கலந்து நன்கு பிசையவும்.
மாவையும், பூரணத்தையும் சரி அளவாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
வாழை இலை அல்லது திக்கான ப்ளாஸ்டிக் பேப்பர் எடுத்து நல்லெண்ணையை நன்கு தடவி ,அதன் மேல் ஒரு மைதா உருண்டையை வைத்து கையால் சிறிய வட்டமாக்கவும். அதில் ஒரு பூரண உருண்டை வைத்து நன்கு மூடி உள்ளங்கையால் அதனை வட்ட போளிகளாகத் தட்டவும்.
தவ்வாவை கேஸில் வைத்து எண்ணெயைத் தடவி தட்டிய போளியை அதில் போடவும். சற்று வெந்தபின் திருப்பிப் போட்டு வேக விடவும்.இரு பக்கமும் நெய்யைத்தடவி எடுத்து வைக்கவும். கேஸை சிம்மில் வைக்கவும். பெரிதாக வைத்தால் தீய்ந்து விடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

