தேவை
அரிசிமாவு-- 2 கப் (கொழுக்கட்டை மாவு தயாராகக் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொள்ளலாம்.)
வீட்டில் தயாரிக்கும் முறை...
21/2 கப் பச்சை
அரிசியை நன்கு களைந்து 1/2 மணி ஊற வைத்து, வடிகட்டி மிக்ஸியில்
மாவாக அரைக்கவும். அதை வெறும் வாணலில லேஸாக சிவக்க (கோலம்
போட வரும் பதம்) வறுக்கவும்.
தேவை
காராமணி-- 1/2 கப் (இரண்டுக்குமாக)
காராமணி-- 1/2 கப் (இரண்டுக்குமாக)
தேங்காய் -- 1
(ஒரு மூடியை வெல்ல அடைக்காக நறுக்கிக் கொள்ளவும். அடுத்த மூடியை துருவிக் கொள்ளவும்.)
செய்முறை
வெல்லஅடை
அரிசி மாவு--1 கப்
வெல்லம்-- 11/2 கப்
ஏலப்பொடி-- 1/2 தேக்கரண்டி
தண்ணீர்-- 2 கப்
அரிசி மாவு--1 கப்
வெல்லம்-- 11/2 கப்
ஏலப்பொடி-- 1/2 தேக்கரண்டி
தண்ணீர்-- 2 கப்
காராமணியை சற்று சூடு வர வறுத்து, 15 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். குக்கரில் 4 சத்தம் விட்டு வேக விடவும்.
தண்ணீரைக்
கொதிக்க வைத்து அதில் வெல்லம் போட்டுக் கரைய விடவும். வடிகட்டவும். கொதித்ததும் அதில் வறுத்த மாவு, நறுக்கிய
தேங்காய்த்துண்டுகள், வெந்த காராமணியில் பாதி, ஏலப்பொடி, 4 டீஸ்பூன்
நெய் சேர்த்து மொத்தையாகக் கிளறவும்.
இறக்கி ஆறியதும், ஒரு பெரிய
எலுமிச்சை அளவு உருட்டி வடை மாதிரி செய்து தட்டி, நடுவில் துளை செய்யவும்.
உப்பு அடை
வாணலியில் 4,5 ஸ்பூன் தேங்காய் எண்ணை, 2 ஸ்பூன் நெய்
சேர்த்து அதில் சிறிது பெருங்காயம், கடுகு, 2மிளகாய் வற்றல், 2பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து
11/2 கப் தண்ணீர் விடவும். அதில் 1 கப் வறுத்த மாவு, துருவிய தேங்காய்,
வெந்த காராமணி, உப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறி வெல்ல அடை போலத்
தட்டி இட்லித் தட்டில் வைத்து அல்லது ஒற்றைத் தட்டிலோ வைக்கவும்.
குக்கரில் வைத்து 4 சத்தம் வரும்வரை வேகவிடவும்.
வெண்ணையுடன் நோன்பு செய்யவும்.
காலத்திற்கு ஏற்ற, மிகவும் பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குபொதுவாக வருடம் ஒருமுறை மட்டுமே இந்தப்பதார்த்தங்கள் அபூர்வமாக செய்யப்படுவதால் அனுபவம் வாய்ந்தவர்களுக்கே இந்த செய்முறை சற்றே மறந்து போகலாம்.
புதிதாக இதனைச் செய்ய முயற்சிக்கும் தனிக்குடுத்தன பெண்மணிகளுக்கு என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம். சரியாக பதமாக ருசியாக அமையாமல் போகலாம்.
அனைவருக்கும் பயன்படும் விதமாக இந்த நேரத்தில் இவ்வாறு ஒரு பொறுமையான அருமையான செய்முறை விளக்கம் கொடுத்துள்ளதில் மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
காரடையான் நோன்பு நல்வாழ்த்துகள்.
Thank you for comment and wishes...
பதிலளிநீக்குThanks for the receipe.
பதிலளிநீக்குviji