ஆஷாட ஏகாதசிக்கு பண்டரிநாதனுக்கு பாயசத்துடன் ஏதாவது ஸ்வீட் பண்ணலாமேனு யோசிச்சேன்!
என் பிள்ளை போனமுறை வந்தபோது ஜெர்மனியிலிருந்து வாங்கி வந்த ஹேஸல்நட் பவுடர் இருந்தது. இதை வைத்து ஒரு கேக் பண்ணலாமென்று முடிவு செய்தேன்.
ஹேஸல்நட் என்பது கொண்டைக்கடலை மாதிரி பெரியதாக இருக்கும். மிக சத்தானது என்பான் என் பிள்ளை.
வெளிநாடுகளில் மட்டுமே இதை நான் பார்த்ததுண்டு. பாதாம், மிந்திரி, பிஸ்தா, வால்நட் போல் இதில் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் செய்வார்கள்.
ஆனால் இதில் நம்ம மெதட்ல கேக் பண்ணினா எப்படி இருக்குமோ என்று உள்ளூர பயம்!
கசக்குமோ..துவர்க்குமோ? கண்ணனை வேண்டிக் கொண்டு கேக் பண்ணி நைவேத்யமும் பண்ணிவிட்டு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது!
Hazelnutற்கு தமிழ்ப் பெயர் தெரியவில்லை. Googleலும் சரியான பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை! எப்படியோ பாண்டுரங்கனுக்கு ஒரு புதிய இனிப்பு பண்ணி கொடுத்தாச்சு!
தேவை
ஹேஸல்நட் மாவு..1கப்
தேங்காய் துருவல்1கப்
நெய்..1கப்
பால்..1கப்
சர்க்கரை..3கப்
ஏலப்பொடி..1டீஸ்பூன்
செய்முறை
கடலைமாவை வாணலியில் லேசாக வறுக்கவும்.சிவக்கக் கூடாது.
அத்துடன் ஹேஸல்நட் மாவு, பால், நெய்,சர்க்கரை இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
கேஸை சிம்மில் வைத்து நன்கு கலந்து கைவிடாமல் கிளறவும்.
நன்கு பூத்து வந்து ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.
மிந்திரி தேவையெனில் நெய்யில் வறுத்து சேர்க்கவும். தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.
இதில் ஹேஸல்நட்டுக்கு பதிலாக பாதாம் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக