துவரம்பருப்பு-- 1 கப்
கடலைப் பருப்பு--- 1/4 கப்
மிளகாய் வற்றல்-- 2
மிளகு-- 2 தேக்கரண்டி
உப்பு--- தேவையான அளவு
செய்முறை
துவரம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் எண்ணையில்லாமல் சிவக்க வறுக்கவும்.
பாதி வறுக்கும்போதே மிளகு, மிளகாய் வற்றலையும் சேர்த்துக் கொள்ளவும்.
இறக்கி ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்யவும். ரொம்ப நைஸாக இருக்கக் கூடாது.
சாதத்தில் நல்லெண்ணையோ, நெய்யோ சேர்த்து இந்த பருப்புப் பொடி
போட்டு கலந்து மோர்க் குழம்பு, அப்பளத்துடன் சாப்பிடவும்.
இதில் பெருங்காயம் சேர்ப்பதில்லை. விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
ருசியான பருப்புப்பொடி பற்றிய எளிமையான தயாரிப்பு முறை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஇந்தப்பகுதியிலும் WORD VERIFICATION என்ற தொல்லை உள்ளது. அதை உடனடியாக நீக்குங்கள். அது இருந்தால் யாரும் கருத்தளிக்கவே வர மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும்.
அன்புடன் கோபு.
திரு வை.கோ.அவர்களுக்கு ...தங்கள் விமரிசனத்திற்கு மிக்க நன்றி.தாங்கள் எழுதியுள்ளபடி WORD VERIFICATION என்ற தொல்லையை நீக்கி விட்டேன்.
பதிலளிநீக்குஅப்பாடி ....... மிக்க நன்றி ! ;)
நீக்கு