Sunday 15 March 2015

காலி ஃ ப்ளவர் கூட்டு



தேவை
காலிஃளவர்--சிறியது-- 1

உரித்த பச்சைப் பட்டாணி--- 1/2 கப்

துவரம்பருப்பு அல்லது பயத்தம்பருப்பு -- 1/4 கப்

சாம்பார் பொடி-- 2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணை (வறுக்க, தாளிக்க) 4டீஸ்பூன்

கருவேப்பிலை-- 2 கொத்து

உப்பு-- தேவையான அளவு



வறுத்து அரைக்க
பெருங்காயம்- 1 சிறு துண்டு

கடலைப் பருப்பு-- 2 டீஸ்பூன்

தனியா-- 3 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்--- 4

துருவிய தேங்காய்--- 5 டேபிள்ஸ்பூன்


தாளிக்க
கடுகு-- 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு-- 11/2 டீஸ்பூன்

நிலக்கடலை--1 டீஸ்பூன்


செய்முறை
காலிஃப்ளவரை சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் போட்டு வைத்து பொடியாக நறுக்கவும்.பட்டாணியை உரிக்கவும்.

பாத்திரத்தில் காலிஃப்ளவரையும், பட்டாணியும்  போட்டு முழுகும் வரை நீர் விட்டு வேக விடவும். தேவையான உப்பு, சாம்பார்பொடி சேர்க்கவும்.

வறுக்க கொடுக்கப் பட்டுள்ள சாமான்களை 3 டீஸ்பூன் எண்ணையில் வரிசையாக சிவக்க வறுக்கவும்.அவற்றுடன் தேங்காயைச் சேர்த்து நைசாக அரைக்கவும்.


துவரம்பருப்பை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

காய்கறிகள்  நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் வெந்த துவரம்பருப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைத்து, தேங்காய் எண்ணையில் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலை  சேர்த்து சிவந்ததும் கூட்டில் கொட்டி நன்கு கலக்கவும்.கருவேப்பிலை சேர்க்கவும்.
சப்பாத்தியுடனும், சாதத்துடனும் சேர்த்து சாப்பிட இந்தக் கூட்டு அருமையாக இருக்கும்.

1 comment: